கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் தொடர் கல்வி நிலையம் தேசிய மட்டத்தில் பயிற்சிகளை வழங்குகின்றது. அது உள்ளகப் பயிற்சிநெறிகளையும் திணைக்கள பதவியனியினருக்கான பயிற்சி வசதிகளையும் வழங்குகின்றது. கா.உ.சு.திணைக்களத்தின் தொடர் கல்வி நிலையம் பேராதனையில் அமையப் பெற்றுள்ளது. கா.உ.சு.திணைக்களத்தின் மனிதவள அபிவிருத்திப் பிரிவினால் இதன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தொடர் கல்வி நிறுவனமானது வதிவிடப் பயிற்சிகளையும் 30 பேர்களைக் கொண்ட குழுவிற்கு பாடநெறியை வழங்குவதற்கும் அத்துடன் இந்நிறுவனம் கேட்போர் கூடம், இரண்டு விரிவரை மண்டபம் Áலகம் மற்றும் நன்கு பொறுத்தப்பட்டுள்ள மின் கற்கை வசதிகளையும் கொண்டமைந்துள்ளது. மிருக வைத்தியர்கள், கால்நடை உத்தியோகத்தர்கள், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்; மற்றும் திணைக்கள பதவியனியினர்களின் ஏனைய வகுதியினரையும் கொண்டு செயற்படுகின்றது. அத்துடன் இந்நிறுவனம் தனியார் துறையினருக்கும் அரச நிறவனங்களுக்கும் பயிற்சிகளை வழங்குகின்றது.
கால்நடைத்துறையில் தொழில்நுட்ப ஆளனியினருக்கான தொடர் கல்வியினை வழங்கும் ஒரே ஒரு நிறுவனம் இலங்கையில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் தொடர் கல்வி நிறுவனமாகும். கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கா.உ.சு.திணைக்களம் ஏனைய அலகுகள் பல்கலைக்கழக முறைமை மற்றும் ஏனைய தனியார் துறையினருக்கும் மனித வளங்களை இந்நிறுவனம் பயன்படுத்துகின்றது. தொடர் கல்வி நிறுவனத்தின் வதிவிடப் பயிற்சி நெறிகளுக்கும் மேலாக கா.உ.சு.திணைக்களத்தின் மற்றும் எனைய நிறுவனங்களினதும் ஒழுங்கு செய்யப்படுகின்ற பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் வேலையரங்குகள் என்பன நடாத்தப்படுகின்றன.